உத்தரகண்டில் பெய்து வரும் கனமழையால் உருவான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 46 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
உத்தரகண்ட் மாநிலத்தில் அதிகப்படியான கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க | உத்தரகண்டில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு
முக்கியமாக சாமோலி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர் கனமழை பெய்து வருவதால் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் 7 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த நிலச்சரிவுகளின் மூலம் இதுவரை 46 பேர் வரை பலியாகியிருப்பதாகவும் 11 பேர் மாயமாகியிருப்பதாகவும் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்திருக்கிறார். மேலும் கனமழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு சார்பில் ரூ.1,09,000 மற்றும் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில் நிலைமையின் தீவிரம் அறிந்து பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உத்தரகண்டின் நிலை குறித்து தெரிந்து கொண்டார். மேலும் மாநிலத்திற்குத் தேவையான நிவாரணம் மற்றும் மீட்புப்பணி உதவிகளை விரைவாக வழங்குவதாகவும் மோடி உறுதியளித்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்

மே 4, 5-ல் சோளிங்கா் மலைக்கோயில் ரோப்காா் சேவை ரத்து

கந்துலா சுலோச்சனா ராணியாக அனுபமா பரமேஸ்வரன்!

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


