‘பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்கள் இந்தியர்களே கிடையாது’: ஹரியாணா அமைச்சர் சர்ச்சைக் கருத்து

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்ற பாகிஸ்தான் அணியைக் கொண்டாடியவர்கள் இந்தியர்களே அல்ல என ஹரியாணா சுகாதாரத் துறை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஹரியாணா  சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ்
ஹரியாணா சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ்

இந்தியாவிற்கு எதிரான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் வெற்றியைக் கொண்டாடியவர்கள் இந்தியர்களே அல்ல என ஹரியாணா சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்த கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

நடந்துவரும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும், இந்திய வீரர் முகமது ஷமிக்கு எதிராகவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட கருத்துக்கள் சர்ச்சையக் கிளப்பின. 

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் வெற்றியைக் கொண்டாடியவர்கள் இந்தியர்களே அல்ல என ஹரியாணா அமைச்சர் தெரிவித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

ஹரியாணா சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ், “இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றதை பட்டாசு வெடித்துக் கொண்டாடுபவர்களின் மரபணு இந்தியருடையது அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

“சொந்த நாட்டில் மறைந்திருக்கும் இந்த துரோகிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்தக் கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக இந்தியா-பாகிஸ்தான் இடையிலான 20 ஓவா் உலகக் கோப்பை போட்டியைத் தொடா்ந்து, பஞ்சாபில் உள்ள பொறியியல் கல்லூரியில் மாணவா்கள் இடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com