மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை

கரோனா தடுப்பூசி இயக்கம் தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். 
 மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா(கோப்புப்படம்)
 மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா(கோப்புப்படம்)

கரோனா தடுப்பூசி இயக்கம் தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். 

நாட்டில் கரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி மாதம் முதல் செலுத்தப்பட்டு வருகிறது. அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், கரோனா தடுப்பூசி இயக்கம் குறித்து  மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா இன்று காணொலி வழியாக ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். இதில் அனைத்து மாநிலங்களின் சார்பில் அந்தந்த சுகாதாரத்துறை அமைச்சர்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் இதுவரை 103.53 கோடி தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை இன்று தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 55.89 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை 107.81 கோடி கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 12.37 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com