கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் செய்யும் மாபெரும் தவறு

உங்களுக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக வந்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று ஒடிசா அரசு மக்களை வேண்டிக் கேட்டுக் கொண்டுள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் செய்யும் மாபெரும் தவறு
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் செய்யும் மாபெரும் தவறு

புவேனஸ்வரம்: முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களே, ஒருவேளை உங்களுக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக வந்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று ஒடிசா அரசு மக்களை வேண்டிக் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த வேண்டுகளுக்குக் காரணம் என்ன?

ஒடிசாவில், கடந்த ஒரு வாரத்தில், கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதுதான்.

ஒடிசா மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் நிரஞ்சன் மிஷ்ரா கூறுகையில், நாம் ஏற்கனவே கையாண்ட மூன்று விஷயங்கள்.. பரிசோதனை, கண்டுபிடித்தல், சிகிச்சை ஆகியவைதான் தற்போதும், மூன்றாவது அலை வராமல் தடுக்கும் தாரக மந்திரங்களாக உள்ளன. பல நாடுகளில் தற்போது கரோனா பரவல் அதிகரித்துள்ளது. எனவே, நாமும் அதனை எதிர்கொள்ள அல்லது தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தே ஆக வேண்டும்.

முதலில், முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், தங்களுக்கு கரோனாவுக்கு எதிரான முழுமையாக தடுப்பாற்றல் கிடைத்துவிட்டது என்று நினைத்து தவறிழைத்து விடுகிறார்கள்.

அதாவது, சில பகுதிகளில் மட்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. காரணம், முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், கரோனா தொற்று பாதித்த நோயாளிகளுடன் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து தொற்று பாதித்து சில அறிகுறிகளும் வருகிறது. ஆனால், தடுப்பூசி செலுத்திக் கொண்டு விட்டதால் கரோனா பரிசோதனை செய்து கொள்ள முன்வருவதில்லை. இதுதான் தற்போதைய முக்கியக் காரணம்.

அதே வேளையில், மக்கள் சாதாரண காய்ச்சல், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பு மற்றும் கரோனா அறிகுறிகளை நினைத்துக் குழப்பிப் கொள்கிறார்கள். எனவே, மக்கள் கரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வந்து பரிசோதனை செய்துகொண்டு கரோனா இல்லை என்பதை உறுதி செய்துக் கொள்ளலாம்.

ஒடிசா மாநிலத்தில் புதிதாக 433 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. அவர்களில் 64 பேர் 18 வயதுக்குக் குறைவானவர்கள். இதில் 207 பேர் குர்தா பகுதியைச் சேர்ந்தவர்கள். அதாவது நாள்தோறும் பதிவாகும் ஒட்டுமொத்த பாதிப்பில் 50 சதவீதம் இப்பகுதியில் பதிவாகிறது.

அதாவது, கடற்கரையோர மாவட்டங்களிலிருந்து வரும் 70 சதவீதம் பாதிப்பு புவனேஸ்வரத்திலிருந்து வருகிறது. இங்குதான் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள். 

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களால் என்ன ஆகும்?
கரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவர்களுக்கு அறிகுறிகள் தென்பட்டாலும் பாதிப்பு ஏற்படாது. அதனால் அவர்கள் கரோனாவை நினைத்து அச்சப்படவும் மாட்டார்கள். பரிசோதனை செய்யவும் மாட்டார்கள். ஆனால், அவர்கள் மூலமாக, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கும், 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் கரோனா பாதிப்பு ஏற்படுகிறது. தொற்று பாதிக்கிறது. நாள்தோறும் பதிவாகும் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

எனவே, வீடுகளிலும் கூட தடுப்பூசி செலுத்திக் கொண்டோமே.. நமக்கு கரோனா வராது என்று கருதாமல், வீட்டில் இருக்கும் குழந்தைகள் மற்றும் சிறார்களையும் கருத்தில் கொள்வது அவசியம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com