‘உத்தரப்பிரதேசத்தில் மின்கட்டணக் கொள்ளையை ஒழிப்போம்’: பிரியங்கா காந்தி

காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது மின்கட்டணம் என்கிற பெயரில் நடந்துவரும் கொள்ளையை தடுத்து நிறுத்துவோம் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது மின்கட்டணம் என்கிற பெயரில் நடந்துவரும் கொள்ளையை தடுத்து நிறுத்துவோம் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2022) தொடக்கத்தில் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக அரசை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தீவிரமாக பிரசாரம் செய்துவருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மின்கட்டணம் என்கிற பெயரில் மக்களிடமிருந்து கொள்ளையடிப்பதை ஒழிப்போம் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 

தனது சுட்டுரைப் பதிவில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர்,  “பாஜக ஆட்சியில் மின் கட்டணம் மற்றும் ஸ்மார்ட் மீட்டர் கொள்ளையால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தவுடன் இந்த மின் கட்டண கொள்ளை முடிவுக்கு வரும்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் உத்தரப்பிரதேசத்தில் தொழிலாளி ஒருவரின் குடும்பத்திற்கு ரூ.19 கோடியே 19 லட்சம் மின்கட்டணம் செலுத்தக்கோரி வெளியான மின்துறையின் நோட்டிஸை பிரியங்கா காந்தி சுட்டிக்காட்டி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com