ராஜஸ்தானில் தொடர்ந்து முன்னேறும் காங்கிரஸ்; பாஜகவுக்கு பின்னடைவு

ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது என்றுஅம்மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோடாஸ்ரா தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ராஜஸ்தானில் ஆறு மாவட்டங்களுக்கு நடத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் முன்னிலைவகித்துவருகிறது. அசோக் கெலாட் தலைமையில் தேர்தலை சந்தித்த அக்கட்சி 670 பஞ்சாயத்து சமிதி இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, 4 ஜில்லா பரிஷத்துகளை கைப்பற்றியுள்ளது.

பாரத்பூர், தவுசா, ஜெய்ப்பூர், ஜோத்பூர், சவாய், மதோபூர், சிரோஹி மாவட்டங்களில் 200 ஜில்லா பரிஷத்துகள், 1,564 பஞ்சாயத்து சமிதி இடங்களுக்கு கடந்த ஆகஸ்ட் 26, 29 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 

தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோடாஸ்ரா கூறுகையில், "உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான  இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது. மொத்தமுள்ள 1,562 பஞ்சாயத்து சமிதி வார்டுகளில் 670 இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர். பாரத்பூரில் காங்கிரஸ் கொள்கையால் ஈர்க்கப்பட்ட 171 வேட்பாளர்கள் வெற்றி அடைந்துள்ளனர்" என்றார்.

பாஜக 551 பஞ்சாயத்து சமிதிகளையும் 88 ஜில்லா பரிஷத்துகளையும் பாஜக கைப்பற்றியுள்ளது. அதேபோல், சிரோஹி ஜில்லி பரிஷத் போர்டு தலைவர் பதவி பாஜகவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாயாவதியின் பகுஜன் சமாத் கட்சி 11 பஞ்சாயத்து சமிதிகளையும் 3 ஜில்லா பரிஷத்துகளையும் கைப்பற்றியுள்ளது. 290 பஞ்சாயத்து சமிதிகளிலும் 7 ஜில்லா பரிஷத்துகளிலும் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர். 

கடந்தாண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 21 மாவட்டங்களில் நடத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியே பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com