தேசிய பாதுகாப்பு அகாதெமியில் பெண்கள் சேர்வதற்கு அனுமதி: மத்திய அரசு

தேசிய பாதுகாப்பு அகாதெமியில் பெண்கள் சேர பாதுகாப்பு படை அனுமதி அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்திய ராணுவத்தில் நிரந்தர ஆணையத்திற்காக பெண்கள் தேசிய பாதுகாப்பு அகாடமியில் (என்டிஏ) அனுமதிக்கப்படுவார்கள் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது. இருப்பினும், பெண்கள் சேர்வதற்கான வழிகாட்டுதல்களை வகுக்க கால அவகாசம் தேவைப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.கே. கெளல், சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட உச்ச நீதிமன்றம் அமர்வு, "என்டிஏ-வில் பெண்களை சேர்க்க பாதுகாப்பு படை அனுமதி வழங்கிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சீர்திருத்தம் என்பது ஒரே நாளில் நடைபெறவது அல்ல. அதற்கான செயல்முறை மற்றும் நடவடிக்கைக்கான காலக்கெடுவை அரசே அமைக்கும்.

பாதுபாப்பு படை முக்கியமான பங்கை வகிக்கிறது. குறிப்பாக, பாலின சமத்துவத்தில் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. எனவே, நீதிமன்றம் தலையிடும் வரை காத்திருக்காமல் பாலின சமத்துவத்தை உறுதி செய்ய அவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என தெரிவித்தது.

இந்த விவகாரத்தில், செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, தேசிய பாதுகாப்பு அகாதெமிக்கான நுழைவு தேர்வில் பெண்கள் கலந்து கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com