ஆந்திரத்தில் 3.5 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

நாடு முழுவதும் கரோனா பரவலுக்கு எதிராக தடுப்பூசிகளை மிக வேகமாக செலுத்தி வருகிற நிலையில் ஆந்திரத்தில் இதுவரை 3.5 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.

தென் இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான ஆந்திரத்தில் கடந்த செப்-11 முதல் 13 வரையில் நடத்தப்பட்ட மாபெரும் தடுப்பூசி முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களால் தான் இத்தனை பெரிய சாதனை நிகழ்ந்திருப்பதாக சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் முகாம் நடந்த மூன்று நாட்களில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட 18-44 வயது உடையவர்கள் மட்டும் 28.36 லட்சம் என்றும் மாநிலத்தில் இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியைக் கடந்து விட்டது எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 75.2 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com