ஒடிசா: சரக்கு ரயில் தடம்புரண்டு ஆற்றில் விழுந்தது
ஒடிசாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் ஆறு பெட்டிகள் கவிழ்ந்து ஆற்றுக்குள் விழுந்தது.


ஒடிசாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் ஆறு பெட்டிகள் கவிழ்ந்து ஆற்றுக்குள் விழுந்தது.
ஒடிசாவின் அங்குல் - தல்செர் மார்க்கத்தில் இன்று அதிகாலை நேரிட்ட இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதில் ரயில் ஓட்டுநர் மற்றும் உதவியாளர்கள் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர்.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக பெய்த தொடர் மழையால் பாலம் சேதமடைந்திருந்ததால், ரயில் விபத்துக்குள்ளானதாக ரயில்வே விளக்கமளித்துள்ளது.
இந்த விபத்தில் கோதுமைகளை ஏற்றிச்சென்ற ஆறு பெட்டிகள் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...