மகாராஷ்டிரத்தில் கடந்த ஓராண்டில் ரூ.150 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.150 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போதைப் பொருள தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.150 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போதைப் பொருள தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய மும்பை போதைப் பொருள் தடுப்பு ஆணையத்தைச் சேர்ந்த சமீர் வான்கடே, கடந்த ஓராண்டில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக 34 நைஜீரியர்கள் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் இதுவரை ரூ.150 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 12 கி.கி. ஹெராயின், 2 கி.கி. கொகைன், மற்றும் 350 கி.கி. கஞ்சா மற்றும் 25 கி.கி. மெஃபெட்ரோன் உள்ளிட்டவைகளும் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 114 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com