இந்து, முஸ்லிம் பெண்கள் ஒருவருக்கொருவரின் கணவர்களுக்காக சிறுநீரக தானம்

சுஷ்மா உனையால் (48), சுல்தானா கத்தூன் (46) ஆகியோர் தங்களது தலையெழுத்தை மாற்ற ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டனர். இருவரும் ஒருவருக்கொருவரின் கணவர்களுக்கு தங்களது சிறுநீரகத்தை தானமளித்துள்ளனர்.
இந்து, முஸ்லிம் பெண்கள் ஒருவருக்கொருவரின் கணவர்களுக்காக சிறுநீரக தானம்
இந்து, முஸ்லிம் பெண்கள் ஒருவருக்கொருவரின் கணவர்களுக்காக சிறுநீரக தானம்

டேஹ்ராடூன்: சுஷ்மா உனியால் (48), சுல்தானா கத்தூன் (46) ஆகியோர் தங்களது தலையெழுத்தை மாற்ற ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டனர். இருவரும் ஒருவருக்கொருவரின் கணவர்களுக்கு தங்களது சிறுநீரகத்தை தானமளித்துள்ளனர்.

ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ளும் வகையில், இந்து பெண், முஸ்லிம் பெண்ணின் கணவருக்கும், முஸ்லிம் பெண் இந்து பெண்ணின் கணவருக்கும் தங்களது சிறுநீரகத்தை தானமளித்துள்ளனர்.

கடந்த வாரம் இதற்கான அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டன. அஷ்ரஃப் அலி (51), விகாஸ் உனியால் (50) ஆகியோர் தற்போது நலமாக உள்ளனர்.

நடந்தது என்ன? 
இருவருக்கும் சிறுநீரகம் செயலிழந்து டயாலிசிஸ் செய்து வந்தனர். சிறுநீரக தானத்துக்காக மிகப்பெரும் தேடலும் நடைபெற்று வந்தது.

இது குறித்து சுஷ்மா உனியால் கூறுகையில், எனது உணர்ச்சிப் பெருக்குகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை. சுல்தானா கத்தூன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நான் என்றும் நன்றிக் கடன் பட்டுள்ளேன். நாங்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ள முன் வந்தோம். அதனால்தான் இங்கே இரண்டு குடும்பங்களாக இருக்கிறோம் என்றார் கண் கலங்கியபடி.

சுஷ்மா உனியாலிடம் சிறுநீரகத்தை தானம் பெற்றவரின் மனைவியான சுல்தானா கத்தூன் கூறுகையில், சுஷ்மா எனது உடன்பிறவா சகோதரியாக மாறியுள்ளார். இந்த உலகிலேயே, மனிதநேயத்தை விடச் சிறந்த உறவு வேறு எதுவுமே இல்லை என்றார்.

உனியால் கூறுகையில், எனது கணவரின் சிறுநீரகம் வெகுவாகப் பாதித்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஹோமோடயாலிசிஸ் செய்து வந்தோம். எனக்கோ, எனது குடும்பத்தினரின் சிறுநீரகமோ அவருக்குப் பொருந்தவில்லை. அப்போதுதான் ஹிமாலயன் மருத்துவமனையிலிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. அங்கேச் சென்று, ஒருவருக்கு ஒருவர் பேசி முடிவு செய்து இன்று மகிழ்ச்சியோடு இருக்கிறோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com