இன்னும் எத்தனை காலம்தான் முகக்கவசம் அணிவது? 

முகக்கவசம் உண்மையிலேயே பயனளிக்கக் கூடியதா? ஆம் என்றால், அதில் என்95 முகக்கவசமா, அறுவை சிகிச்சைக் கூடங்களில் பயன்படுத்துவதா?
இன்னும் எத்தனை காலம்தான் முகக்கவசம் அணிவது?
இன்னும் எத்தனை காலம்தான் முகக்கவசம் அணிவது?


முகக்கவசம் உண்மையிலேயே பயனளிக்கக் கூடியதா? ஆம் என்றால், அதில் என்95 முகக்கவசமா, அறுவை சிகிச்சைக் கூடங்களில் பயன்படுத்துவதா? துணி முகக்கவசமா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை காண சுமார் ஒன்றரை ஆண்டுகாலமாக ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனைக் கூடங்களிலும், மாதிரிகளைக் கொண்டும், முகக்கவசம் எந்த அளவுக்கு நம்மைக் காக்க உதவுகிறது என்பதை ஆராயந்து வந்தார்கள்.

கரோனாவுக்கு எதிரான போரில் நமக்கு எது பயன்படும், எது பயன்படாது என்பதை புரிந்து கொள்வதில் பலருக்கும் பல குழப்பங்கள் இருந்தன.

இதற்கெல்லாம் விளக்கம் கொடுக்கிறார் அமெரிக்காவின் பெர்கேலேவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் ச்ரந்த லாரா எச். க்கோங். சுற்றுச்சூழல் சுகாதார அறிவியல் துறையில் நான் உதவிப் பேராசிரியராக உள்ளேன்.

நானும் கூட இதுபோன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தேன். இந்த ஆண்டு தொடக்கத்தில், எதுதான் சிறந்த முகக்கவசம் என்ற ஆராய்ச்சியில் இறங்கினேன்.

தோராயமான மிகப்பெரிய பரிசோதனையில் நான் பங்குபெறும் வாயப்பு கிடைத்தது. அதில், முகக்கவசம் அணிவதன் பலன்கள் குறித்து சோதனையும் இடம்பெற்றிருந்தது. இந்த ஆய்வு முடிவுகள் இன்னும் முழுமையாக மதிப்பீடு செய்யப்படவில்லை. ஆனால், மருத்துவத் துறையினரால் பெரிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக உள்ளது.

இந்த ஆய்வில், துல்லியத் தங்கத்துக்கு சான்றளிப்பது போல, கிடைத்த ஒரு உறுதி தரும் தகவல் என்னவென்றால், முகக்கவசம் அணிவது, குறிப்பாக அறுவை சிகிச்சையரங்க முகக்கவசத்தை அணிவது நிச்சயம் கரோனாவிலிருந்து காக்க உதவும்.

ஆய்வுக் கூடங்கள் மற்றும் நிகழ்வுகளை ஆராய்ந்ததில், இதுபோன்ற தொற்று பரவலிலிருந்து காத்துக் கொள்ள மக்கள் முகக்கவசம் அணிவது, 1910ஆம் ஆண்டில் பிளேக் தொற்று நோய் பரவும் காலத்திலிருந்தே பழக்கத்தில் ஈருந்துள்ளது.

கரோனா பேரிடர் காலத்தில், கரோனா தொற்று பாதித்த நபரிடமிருந்து பரவும் மூச்சுக் காற்றிலிருக்கும் தொற்றுகள் மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க முகக்கவசம் உதவியது. தொற்றுப் பரவலை மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தியது.

சமீபத்திய ஆய்வுக் கூட பரிசோதனைகளும் இந்த யோசனையை உறுதி செய்துள்ளன.

2020, ஏப்ரல் மாதத்தில், கரோனா வைரஸ் பாதித்த நபர்கள், முகக்கவசம் அணிந்திருந்தால் அவர்களின் மூச்சுக் காற்றின் மூலம் காற்றில் அதிகமான கரோனா வைரஸ்கள் பரவவில்லை என்பது கண்டறியப்பட்டது.

அதுபோல, பல நுண்ணுயிரியல் துறையினரும், முகக்கவசம் அணிவதால், தொற்று பரவலின் தீவிரம் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை உறுதி செய்துள்ளனர்.

உண்மை நிலவரத்தை கண்காணித்து வெளியான ஒரு ஆய்வின் முடிவு 2020ஆம் ஆண்டு இறுதியில் வெளியானது. அதில், முகக்கவசம் அணியும் மக்கள், அணியாத மக்கள், பரிசோதனை, பொதுமுடக்கம், முகக்கவசம் அணிவது என 196 நாடுகளின் புள்ளி விவரங்களும் இடம்பெற்றிருந்தன.

முகக்கவசம் தொடர்பான ஆய்வு, வங்கதேசத்தில் சுமார் 600 கிராமங்களைச் சேர்ந்த 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்குபெறும் வகையில் நடத்தப்பட்டது.

300 கிராமங்களில் முகக்கவசம் குறித்து எதுவும் கூறவில்லை. சிலர் முகக்கவசம் அணிந்திருந்தனர், சிலர் அணியவில்லை, அவர்கள் முன்பு எப்படி இருந்தார்களோ அப்படியே இருக்க வைக்கப்பட்டனர்.

200 கிராமங்களில் அறுவை சிகிச்சைக் கூடத்தில் பயன்படுத்தும் முகக்கவசத்தைப் பயன்படுத்துமாறு கூறினோம். 100 கிராமங்களில் துணியால் ஆன முகக்கவசத்தையே கொடுத்து பயன்படுத்தச் சொன்னோம்.

சுமார் எட்டு வாரங்கள் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.  ஐந்து மற்றும் எட்டாவது வாரங்களில், கரோனா அறிகுறிகள் இருப்பவர்களிடம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

இதில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் முகக்கவசங்களின் பயன்பாடு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தெரிய வந்தது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு இருக்கும் பாதுகாப்பை விட மூன்று மடங்கு அதிகமாக முகக்கவசம் அணிந்தவர்களுக்கு கரோனா பரவலிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கிறது.

அதேவேளையில், சமூக இடைவெளியும் 5 சதவீதமளவுக்கு கரோனா பரவலிலிருந்து காக்கிறது.

முகக்கவசம் அணியாத 300 கிராமங்களை விடவும், முகக் கவசம் அணியுமாறு வலியுறுத்திய 300 கிராமங்களில் கரோனா பரவல் மிகவும் குறைந்து காணப்பட்டது. அதே வேளையில், அறுவை சிகிச்சை அரங்கில் பயன்படுத்தப்படும் முகக்கவசத்தை பயன்படுத்திய கிராமங்களில் கரோனா பரவல் 12 சதவீதம் அளவுக்குக் குறைந்திருந்தது.

இதன் மூலம் கரோனாவுக்கு எதிரான போரில் முகக்கவசங்கள் நிச்சயம் உறுதுணையாக இருக்கின்றன என்ற தகவல் கிடைத்துள்ளது.

நமது அன்றாடப் பணிகளை மேற்கொள்ளும் போது ஏற்படும் கரோனா பரவலுக்கான அபாயத்தை முகக்கவசம் பெருமளவில் குறைக்கிறது என்பது தெளிவாகிறது.

குறிப்பாக, அறுவை சிகிச்சை அரங்கில் பயன்படுத்தும் முகக்கவசம், வயதானவர்கள் பயன்படுத்தும்போது, அதிகப்படியான தொற்று பாதிப்பு மற்றும் பலியாகும் விகிதமும் குறைகிறது என்பது தெரிய வந்துள்ளது.

எனவே, இனி வெளியில் கிளம்பும் போது முகக்கவசத்தை அணியத்தான் வேண்டுமா என்று கேள்வி எழும்பினால், ஆம் நிச்சயமாக அணியத்தான் வேண்டும் என்று உறுதியோடு உங்களுக்கு நீங்களே பதில் சொல்லிக் கொள்ளலாம்.

எப்படியாகிலும், துணியால் ஆன முகக்கவசங்களும் பயனளிக்கக் கூடியவை, மிகுந்த தொற்று அபாயம் இருக்கும் பகுதிகள் அல்லது வயதானவர்கள், இணை நோய்கள் இருப்பவர்கள் தேவைப்படின் அறுவை சிகிச்சை அரங்கில் பயன்படுத்தும் என்95 போன்ற முகக்கவசங்களைப் பயப்டுத்துவது சாலச் சிறந்தது என்று ஆய்வில் தெரிய வந்திருப்பதகாக் கூறுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com