100 கோடி கரோனா தடுப்பூசியை எதிர்நோக்கி இந்தியா: லோகோ உருவாக்கும் போட்டி அறிவிப்பு

100 கோடி கரோனா தடுப்பூசியை எதிர்நோக்கி இந்தியா என்ற தலைப்பில் லோகோ உருவாக்கும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் வெற்றி பெறுவோருக்கு பரிசுத் தொகை ரூ.25,000 அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகப் பெரிய அளவிலான கரோனா வைரஸ் தடுப்பூசி இயக்கம் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக இரண்டு தவணை தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இன்று (29.09.2021) காலை 8 மணி வரை 87.66 கோடி தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டு உள்ளன. இதில் முதல் மற்றும் இரண்டாம் தவணைகள் அடங்கும். இன்னும் சில நாட்களில் இந்த எண்ணிக்கை 100 கோடி என்ற அளவைத் தொட்டுவிடும்.

100 ஆவது கோடி தடுப்பூசி (முதல் தவணை) போடப்பட இருப்பதைக் கொண்டாடும் வகையில் MyGov.in இணையத்தில் அடையாளச் சின்னம்(லோகோ)/அடையாளக் குறியீடு (மஸ்காட்) உருவாக்கும் போட்டியை அறிவித்துள்ளது. ”100 கோடியாவது தடுப்பூசி தவணையை நிறைவு செய்யும் இந்தியப் பயணம்” என்ற மையக் கருத்தில் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் லோகோ/மஸ்கட் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் லோகோ/மஸ்கட் ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகை பெறும்.

இந்தப் போட்டியில் MyGov.in போர்ட்டலில் பதிவு செய்துகொண்டு யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். சமர்ப்பிக்கப்படும் படைப்பு ஒரிஜனலாக இருப்பதோடு காப்புரிமைச் சட்டம் 1957-இன் எந்தப் பிரிவையும் மீறாததாக இருக்க வேண்டும். லோகோ/மஸ்கட்டை அதிக துல்லியத்துடன்  இருக்க வேண்டும்.

இணையம்/செயலி/சமூக ஊடகங்கள்/விளம்பரப் பலகைகள்/விளக்கப் பிரசுரங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தக் கூடிய விதத்தில் தேர்ந்தெடுக்கப்படும் லோகோ இருக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு இறுதி நாள் 10.10.2021.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com