நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு நிறைவு: தமிழகத்திற்கு ரூ.20,880 கோடி விடுவிக்க கோரிக்கை

நிர்மலா சிதாராமன் உடனான சந்திப்பில் தமிழகத்திற்கு நிலுவையிலுள்ள ரூ.20,880 கோடி தொகையை உடனடியாக ஒதுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். 
நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு நிறைவு: தமிழகத்திற்கு ரூ.20,880 கோடி விடுவிக்க கோரிக்கை

நிர்மலா சிதாராமன் உடனான சந்திப்பில் தமிழகத்திற்கு நிலுவையிலுள்ள ரூ.20,880 கோடி தொகையை உடனடியாக ஒதுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். 

ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை வழங்கும் காலம் ஜூன் மாதத்துடன் முடிந்தாகும், மேலும் 2 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றுக் கோரியுள்ளார். 

தில்லியில் மூன்று நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். மத்திய அமைச்சர்களை சந்தித்த நிலையில், இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பில், தமிழகத்தின் நிதி சார்ந்த பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நிர்மலா சீதாராமனுடன் ஆலோசித்தார். இந்த ஆலோசனையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் உடன் இருந்தார்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு, தமிழகத்திற்கு நிலுவையிலுள்ள ரூ.20,880 கோடி தொகையை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். இதில் தமிழகத்துக்கு சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் இழப்பீட்டுக்கு நிலுவை தொகையாக 13504.74 கோடி வரவேண்டியுள்ளது.

2,700 உள்ளாட்சிகளிலும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டதால் மானியத் தொகையினை விடுவிக்க வேண்டும் எனவும் கோரினார்.

தமிழ்நாட்டின் ஊராட்சிகளுக்கு அடிப்படை மானியமாக ரூ.7899.69 கோடி வழங்க 14வதுநிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது. நிதிக்குழு பரிந்துரையின்படி 2900 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.548.76 கோடி மானியம் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com