
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளால் இரண்டு தொழிலாளர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் உள்ளூர் அல்லாதவர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.
புல்வாமா மாவட்டத்தில் உள்ள லாஜூரா என்ற இடத்தில் பீகாரைச் சேர்ந்த பட்லேஷ்வர் குமார் மற்றும் ஜானோ சௌத்ரி ஆகியோர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் காயமடைந்த இருவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஞாயிறன்று மாலை புல்வாமாவில் நவ்போரா பகுதியில் உள்ளூர் அல்லாத இரு தொழிலாளர்களைத் தீவிரவாதிகள் சுட்டுக் காயப்படுத்தினர். அவர்கள் இருவரும் பஞ்சாப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.