27% முதியவர்களுக்கு எடைக்குறைவு: மூத்தக் குடிமக்களின் ஊட்டச்சத்து நிலை என்ன?

மூத்தக் குடிமக்களில் 27 சதவிகிதத்தினர் எடை குறைவாக உள்ளதாக   சமூக  நீதி  மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் செல்வி பிரதிமா பௌமிக் தெரிவித்துள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

மூத்தக் குடிமக்களில் 27 சதவிகிதத்தினர் எடை குறைவாக உள்ளதாக   சமூக  நீதி  மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் செல்வி பிரதிமா பௌமிக் தெரிவித்துள்ளார். 

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த செல்வி பிரதிமா பௌமிக், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகையில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 8.4% என்று குறிப்பிட்டார்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் 'மக்கள்தொகை கணிப்புகள் குறித்த தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையை சுட்டிக்காட்டிய அவர்,

மூத்த குடிமக்களின் மக்கள்தொகை 2021-ல் 13.75 கோடியிலிருந்து 2036-ல் 22.74 கோடியாக அதிகரிக்கும் என்று கணித்துள்ளது. இது மொத்த மக்கள்தொகையில் 10.1%-லிருந்து 14.9%-ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

நாட்டில், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களில் கால் பகுதியினர் எடை குறைவாக உள்ளனர் (27%). முதியவர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் அதிக எடை/உடல் பருமனாக (22%) உள்ளனர்.  முதியோரின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com