புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் கூட்டம், தில்லியில் நடைபெற்று வருகின்றது.

News image

காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்

Updated On :5 ஏப்ரல் 2022, 6:28 am

DIN

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் கூட்டம், தில்லியில் நடைபெற்று வருகின்றது.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றும் வரும் இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் பெரும்பாலானோர் கலந்துகொண்டுள்ளனர்.

உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்பட 5 மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. அதன்பிறகு முதல்முறையாக அக்கட்சியின் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்று வருகின்றது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இந்த வாரத்துடன் முடிவடையவுள்ள நிலையில், மத்திய அரசு பல்வேறு முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்யவுள்ளதால், இதுகுறித்து எம்.பி.க்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்கள் விலை உயர்வு குறித்தும் விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.