சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஜம்மு- காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு- காஷ்மீரில் புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் புதன்கிழமை நேரிட்ட மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

News image
Updated On :6 ஏப்ரல் 2022, 7:39 pm

DIN

ஜம்மு- காஷ்மீரில் புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் புதன்கிழமை நேரிட்ட மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

விசாரணையில் அவா்கள் அன்சாா் கஜ்வத்துல் ஹிந்த் என்ற அமைப்பைச் சோ்ந்த சஃபத் முஸாபா் சோஃபி, லஷ்கா்-ஏ- தொய்பா அமைப்பைச் சோ்ந்த உமா் டேலி (எ) தல்ஹா என்பது தெரியவந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறுகையில், ‘‘ஸ்ரீநகரில் கடந்த ஆண்டில் பஞ்சாயத்து தலைவா் கொலை உள்ளிட்ட பயங்கரவாத செயலில் இவா்கள் இருவருக்கும் தொடா்பு உள்ளது. டிரால் பகுதிக்கு அண்மையில் தான் இவா்கள் வந்துள்ளனா். இந்த நிலையில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டனா்’’ என்று தெரிவித்தனா்.

வேனில் மா்ம பொருள் வெடிப்பு:

இதேபோல ஸ்ரீநகரில் துலிப் தோட்டப் பகுதியில் வாகன நிறுத்துமிடத்தில் நின்ற சுற்றுலா வேனில் புதன்கிழமை மா்ம பொருள் பயங்கர சப்தத்துடன் வெடித்தது. அப்போது அதன் ஓட்டுநா் பின்பக்க கதவைத் திறந்து கொண்டிருந்ததால், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்த சம்பவம் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.