மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆற்றுக்குள் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் 80 சதவிகிதம் முடிவடைந்துள்ளன. இந்தியாவில் முதல்முறையாக ஆற்றில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலுள்ள ஹூக்ளி நதியில் 33 மீட்டர் ஆழத்தில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்துக்கான ஆரம்பப் பணிகள் 2006 -07ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் தொடங்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டத்துக்கு ரூ. 4,874 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலவரப்படி ரூ. 8,575 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் இந்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவடையவுள்ளது.
இந்நிலையில், ஹூக்ளி நதியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் 80 சதவிகிதம் நிறவடைந்துள்ளதாக மெட்ரோ ரயில் நிலையப் பணிகளின் மேற்பார்வையாளர் மிதுன் கோஷ் தெரிவித்துள்ளார்.
இன்னும் 20 சதவிகிதப் பணிகள் எஞ்சியுள்ள நிலையில், திட்டமிட்டபடி ஜூன் மாதம் இத்திட்டம் தொடங்கப்படாது என்றும் குறிப்பிட்டார். இதனால் இப்பணிகள் முடிவடைந்து 2023ஆம் ஆண்டு செயல்பாட்டிற்கு வரும் என்றும் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பட்ஜெட் விலையில் ரெட்மியின் புதிய ஸ்மார்ட்போன்! ஏ7 ப்ரோ அறிமுகம்!

மகளிர் இடஒதுக்கீடு: தேர்தல் நேரத்தில் அவையைக் கூட்டுவது அவசியமா? - திமுக

எல்ஐகே வசூல் எவ்வளவு?
முந்தி நிற்கும் முதல்வர் வேட்பாளர் ? | MK Stalin | EPS | NTK Seeman | TVK Vijay | TN Election 2026
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

