உ.பி.யில் பள்ளியைத் தத்தெடுத்த ஐபிஎஸ் அதிகாரி

உத்தரப் பிரதேசத்தில் கூடுதல் காவல்துறை துணை ஆணையர் சிரஞ்சீவ் நாத் சின்ஹா மாநிலத்தில் பள்ளியைத் தத்தெடுத்த முதல் போலீஸ் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 
உ.பி.யில் பள்ளியைத் தத்தெடுத்த ஐபிஎஸ் அதிகாரி

உத்தரப் பிரதேசத்தில் கூடுதல் காவல்துறை துணை ஆணையர் சிரஞ்சீவ் நாத் சின்ஹா மாநிலத்தில் பள்ளியைத் தத்தெடுத்த முதல் போலீஸ் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 

முதல்வர் யோகி ஆதித்யநாத் துவக்கிவைத்த "ஸ்கூல் சலோ அபியான்" திட்டத்தின் கீழ் அமினாபாத் பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியை சின்ஹா தத்தெடுத்துள்ளார். 

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, 

நான் தத்தெடுத்த பள்ளிக்குச் சென்று குழந்தைகளுக்குச் சிறிது நேரம் பாடம் கற்பித்தேன். அவர்களுக்குப் புத்தகங்கள், எழுதுபொருட்கள், சைக்லேட், பிஸ்கட்கள், முகக் கவசங்கள் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்தேன். பள்ளிக்கு அடிக்கடி சென்று என் சொந்த செலவில் பள்ளியை மேம்படுத்த முயற்சிப்பேன் என்று அவர் கூறினார். 

சின்ஹா ​​ஒரு தீவிர விலங்கு பிரியர். அவர் லக்னௌ மிருகக்காட்சியின் பிராண்ட் தூதராகவும் நியமிக்கப்பட்டார். மேலும் அவர் விலங்கு ஒன்றைத் தத்தெடுக்கவும் திட்டத்தை ஊக்குவித்தார். அவர் தனது வழக்கமான காவல் பணிகளுடன் சுற்றுச்சூழலுக்காகவும், விலங்குகளுக்காகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com