எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி: காஷ்மீரில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்கிய வழக்கில் தேசிய புலனாய்வு முகமையினர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 10:26 am

DIN

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்கிய வழக்கில் தேசிய புலனாய்வு முகமையினர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு  நிதியுதவி செய்து வருவதாக பதியப்பட்ட வழக்கில் இன்று தேசிய புலனாய்வு முகமையினர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, ஸ்ரீநகரைச் சேர்ந்த பரமுல்லா பகுதியில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் ‘காஷ்மீரில் தன்னார்வு அமைப்புகள், நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள்(என்ஜிஓ) மூலம் பயங்கரவாதத்திற்கு நிதியதவி வழங்கப்படுகிறது. இதுகுறித்து இன்று பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது’ எனத் தெரிவித்தனர்.

முன்னதாக, கடந்த மார்ச் 27 ஆம் தேதி தேசிய புலனாய்வு அதிகாரிகள் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்கியது தொடர்பாக ஸ்ரீநகரில் இருக்கும் என்ஜிஓ ஒன்றில்  சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.