கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அசாமில் விஷ காளான்களை சாப்பிட்ட 13 பேர் பலி

அசாமில் நான்கு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்தில் விஷ காளான்களை சாப்பிட்ட 13 பேர் உயிரிழந்தனர். 

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 10:30 am

அசாமில், கடந்த ஒரு வாரத்தில் நான்கு மாவட்டங்களில் விஷ காளான்களை சாப்பிட்ட 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பிரசாந்த் டிஹிங்கியா கூறுகையில், 

பாதிக்கப்பட்ட அனைவரும் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்கள் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர். 

கடந்த ஏழு நாட்களில் விஷ காளான் உட்கொண்டதால் ஒரு மைனர் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். மேல் அசாம் பிராந்தியத்தின் நான்கு மாவட்டங்களில்  விஷ காளான் சாப்பிட்ட மொத்தம் 39 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 13 பேர் உயிரிழந்தனர்.

பலியானவர்கள் திப்ருகர், டின்சுகியா, சிவசாகர் மற்றும் சாரைடியோ மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பெரும்பாலோர் தேயிலைத் தோட்டப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். மேல் அசாம் பகுதியைச் சேர்ந்த பலர் ஒவ்வொரு ஆண்டும் விஷ காளான்களை சாப்பிட்டு நோய்வாய்ப்படுகிறார்கள் என்று மருத்துவர் டிஹிங்கியா கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.