வன்முறைச் சம்பவங்களில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களின் அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் பொருத்தமற்றவை என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்தார்.
ராஜஸ்தானின் கரௌலியில் ஏப்ரல் 2ஆம் தேதி இந்து புத்தாண்டு அன்று நடந்த இருசக்கர பேரணியில் கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் 35 பேர் காயமடைந்தனர்.
குஜராத்தின் ஹிம்மத்நகர் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் கார்கோனில் ஏப்ரல் 10-ம் தேதி ராம நவமி அன்று கல் வீச்சு மற்றும் மோதல்களைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் இந்த வன்முறைச் சம்பவங்கள் நடந்த விதம், அரசு தொடர்ந்த நடவடிக்கைகள், பழிவாங்கும் வகையில் தெரிகிறது. இது பொருத்தமற்ற நடவடிக்கை.
இதுபோன்ற எடுத்துக்காட்டுகள் புதிய இந்தியாவுக்கு வழிவகுக்குமா? என்று மாயாவதி இந்தியில் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக தலைமையிலான உத்தரப் பிரதேச அரசைக் கடுமையாகத் தாக்கிய அவர், குற்றங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு என்ற பெயரில் நீதித்துறையைப் புறக்கணித்து காவல்துறையும் அரசும் செயல்படுகின்றன.
"இது தீங்கிழைக்கும் செயல் மட்டுமல்ல, சட்டத்தின் ஆட்சியைக் கேலிக்கூத்தாக்கும் செயல்".
சட்டத்தின் ஆட்சிக்கு, தண்டனை என்பது சட்ட நடைமுறையின்படி இருக்க வேண்டுமே தவிர, அது தன்னிச்சையாக செயல்படக்கூடாது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ட்வீட் செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


