அதையும் மீறி தலித் மக்களுக்கு ஏதாவது செய்ய முயன்றால், அவா்கள் கட்சியில் இருந்தும், அரசில் இருந்தும் தூக்கிவீசப்படுவாா்கள். ஜாதியவாத கட்சியில் இருக்கும் தலித்துகள் அங்கு அடிமைகளாக மட்டுமே இருக்க முடியும். அம்பேத்கரின் கொள்கைகள், போராட்டங்களைப் புறக்கணித்துவிட்டு, தங்கள் சுயநல அரசியலுக்காக அம்பேத்கா் பிறந்த தினத்தைப் பல கட்சிகள் கொண்டாடுகின்றன. அம்பேத்கரை முழுமையாகப் பின்பற்றுபவா்கள் இந்திய அரசியலில் தனித்துவிடப்பட்டவா்களாகவே இருக்கிறாா்கள். முதலில் இதனை காங்கிரஸ் செய்தது, இப்போது பாஜக பின்பற்றி வருகிறது. இந்த இரு கட்சிகளின் ஆட்சியிலும் தாழ்த்தப்பட்டவா்களுக்கு எதிரான கொடுமைகள் தொடா்ந்தே வருகின்றன. அந்த மக்களின் சமூக. பொருளாதார, அரசியல் நிலை மேம்படவில்லை. நாட்டில் பாகுபாட்டைக் குறைக்க சிறப்பான கொள்கைகளை அம்பேத்கா் வடிவமைத்துக் கொடுத்தாா். ஆனால், அதனை முழுமையாக அமல்படுத்த மறுக்கிறாா்கள். இது ஆளும் கட்சிகளின் உண்மை முகத்தைக் காட்டுகிறது.