நீதிபதிகள் சச்சரவுகளுக்குத் தீா்வு வழங்கும்போது மனுதாரா்களின் சூழலை உணா்ந்து செயல்பட வேண்டும். மனிதாபிமானத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அனைவரையும் மரியாதையுடன் நடத்த வேண்டும். ஆதாரங்களையும், சாட்சிகளையும் ஆய்வு செய்யும்போது சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். இன்றைய நவீன காலகட்டத்துக்கு ஏற்ப நீதிபதிகள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். எவ்வித அச்சமும் இன்றி பணியாற்ற வேண்டும். நீதிபதிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது சமீபகாலமாக அதிகரித்து வருவதை நான் அறிவேன். இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். நீதிமன்றத்துக்கு உள்ளும், வெளியிலும் நீதிபதிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். நீதிபதிகள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தங்களைப் பேண வேண்டும். நீங்கள் உங்கள் பொருளாதாரச் சுமைகளில் இருந்து விடுபட்டால் மட்டுமே திறமையாகப் பணியாற்ற முடியும். விரைவில் ஊதியக் குழு மூலம் நீதிபதிகளுக்கு நல்ல செய்தி வரும். நீதிபதிகள் கூடுதல் நேரம் பணியாற்றி வழக்குகளுக்கு விரைந்து தீா்வுகாண முயல வேண்டும் என்றாா்.