தில்லியில் 14 மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு
தலைநகர் தில்லியில் 14 மாணவர்கள் கரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தலைநகர் தில்லியில் 14 மாணவர்கள் கரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று, பாதித்த 14 பேரில், பெரும்பாலானோர் இணை நோய்களுடன் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தெற்கு தில்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் மாணவர் மற்றும் ஆசிரியருக்கு வியாழக்கிழமை கரோனா சோதனை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, அதே வகுப்பிலிருந்த மற்ற மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
தொற்று விகிதம் குறைந்ததைக் கருத்தில் கொண்டு, கடந்த பிப்ரவரி 28 முதல் கரோனா தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளை நீக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 1 முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் செயல்படத் தொடங்கியது.
இதற்கிடையில், தில்லி அரசு தேசிய தலைநகரில் உள்ள பள்ளிகளுக்கு புதிய ஆலோசனைகளை வெளியிட்டது. அதில் மாணவர் அல்லது ஆசிரியர்களுக்கு கரோனா சாதகமாக இருந்தால் பள்ளி முழுவதுமாக உடனே மூடுமாறு அறிவுறுத்தப்பட்டது.
கடந்த சில நாட்களாக தேசிய தலைநகரில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 366 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளன. இதன் நேர்மறை விகிதம் கிட்டத்தட்ட நான்கு சதவீதமாக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...