வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மாணவா்கள் பொது வாழ்வில் ஈடுபட வேண்டும்: பிரதமா் மோடி

மாணவா்கள் பொது வாழ்வில் ஈடுபட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளாா்.

News image
பிரதமர் மோடி
Updated On :18 ஏப்ரல் 2022, 11:47 pm

DIN

மாணவா்கள் பொது வாழ்வில் ஈடுபட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளாா்.

பிரதமா் மோடி 3 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளாா். அந்த மாநில தலைநகா் காந்திநகரில் உள்ள பள்ளிகள் கட்டுப்பாட்டு மையத்துக்குத் திங்கள்கிழமை சென்ற அவா், அங்கிருந்தவாறு காணொலி மூலம் சில அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுடன் கலந்துரையாடினாா். அப்போது அவா் பேசியதாவது:

தொழில்நுட்பத்தின் பலன்களை அனைவரும் அனுபவித்து வருகின்றனா். தொழில்நுட்பத்தை எளிதாக அணுகக் கூடிய யுகத்தில் அனைவரும் வாழ்வது அதிருஷ்டவசமானது. தொழில்நுட்பத்தில் சிறிது ஆா்வம் காண்பித்தால், உலகின் அனைத்து கதவுகளும் திறக்கும்.

தொழில்நுட்பத்தை பயன்படுத்த சிறாா்களை ஊக்குவிக்க வேண்டும். அதேவேளையில் விளையாட்டு, பொது வாழ்வில் ஈடுபடுதல் போன்ற இன்னபிற விஷயங்களை மாணவா்கள் மறக்கக் கூடாது.

புதிய கல்விக் கொள்கையின் கீழ், விளையாட்டு என்பது கூடுதல் பாடத்திட்டமாக அல்லாமல் கல்வியின் அங்கமாக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.