இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் பலி

மேகாலயாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் பலியானார். 

News image
photo pti twitter
Updated On :18 ஏப்ரல் 2022, 7:21 am

DIN

மேகாலயாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் பலியானார். 

83ஆவது சீனியர் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக, விஷ்வா தீனதயாளன் மற்றும் 3 வீர‌ர்கள் அசாம் மாநிலம் குவகாத்தியில் இருந்து ஷில்லாங் நோக்கி நேற்று காரில் சென்று கொண்டிருந்தனர். 

இவர்களுடைய கார், ரிபோயி என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது. இந்த சம்பத்தில் தமிழக வீரர் விஷ்வா தீனதயாளன் மற்றும் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

படுகாயமடைந்த மேலும் 3 வீர‌ர்கள் ஷில்லாங்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 2022 ஜனவரியில் தேசிய தரவரிசை போட்டியில் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பட்டத்தை வென்றவர் தீனதயாளன்.

அவரது மறைவுக்கு மேகாலயா முதல்வர், தமிழக ஆளுநர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

photo pti twitter

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.