'குற்றவாளிகளைத் தண்டிப்பதில் எந்தவித சமரசமும் இல்லை' - கர்நாடக முதல்வர்

ஹுப்பள்ளி வன்முறை சம்பவத்தில் குற்றவாளிகளைத் தண்டிப்பதில் எந்தவித சமரசமும் இல்லை என்று  கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். 
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை (கோப்புப்படம்)
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை (கோப்புப்படம்)

ஹுப்பள்ளி வன்முறை சம்பவத்தில் குற்றவாளிகளைத் தண்டிப்பதில் எந்தவித சமரசமும் இல்லை என்று  கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். 

சமூக வலைதளத்தில் ஒருவா் வெளியிட்ட மதரீதியான வெறுப்பூட்டும் பதிவால், ஹுப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தில் ஈடுபட்டதாக 89 பேரை போலீஸாா் கைதுசெய்துள்ளனா். சா்ச்சைக்குரிய படத்தை பதிவிட்டவரும் கைது செய்யப்பட்டிருக்கிறாா்.

இக்கலவரத்தில் காவல் துறை வாகனங்களை கலவரக் கும்பல் தீயிட்டுக் கொளுத்தியது. காவல்துறையினா் மீது கல்வீசி தாக்குதலும் நடத்தப்பட்டது. இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்த  கூடுதல் டிஜிபி டாக்டா் சி.எச்.பிரதாப் ரெட்டி தலைமையில் குழு அமைக்கப்பட்டு அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சமூ கவலைத்தளத்தில் சா்ச்சைக்குரிய படத்தை பதிவிட்ட அபிஷேக் ஹிரேமத்தை ஏப். 30-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்திருக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. கலவரத்தினால் ஏப் .20-ஆம் தேதி வரை, ஹுப்பள்ளியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இதுகுறித்து, 

'ஹுப்பள்ளி வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளைத் தண்டிப்பதில் எந்தவித சமரசமும் இல்லை. குற்றவாளி யாராக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைக்குப் பின்னர் அவர்கள் மீது நடவடிக்கை  எடுப்பது உறுதி' என்று தெரிவித்துள்ளார் . 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com