
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாளை (ஏப்.21) இந்தியா வர உள்ளார்.
கடந்த சில மாதங்களாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய சுற்றுப்பயணம் கரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக அவர் நாளை இந்தியா வர உள்ளார்.
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்துக்கு வருகை தரும் போரிஸ் ஜான்சன் அதனைத் தொடர்ந்து அங்கிருந்து தில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார்.
பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம். எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரதமா்கள் இருவரும் ஆலோசிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.