இதுதொடர்பான விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ். பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, வன்முறையின் போது, குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம்களின் கட்டடங்கள் இடிக்கப்பட்டதாகக் கூறி ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பு தாக்கல் செய்த மனு மீது மத்திய அரசு மற்றும் பிற எதிர்மனுதாரர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது. நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில், "இந்த விவகாரத்தில் மே 9-ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும் வகையில், நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். கூடுதல் ஆவணங்கள் ஏதும் இருந்தால், அடுத்த விசாரணைத் தேதிக்கு முன்பாக தாக்கல் செய்யப்படலாம். மறு உத்தரவு வரும் வரை தற்போதைய நிலையே (வியாழக்கிழமை) தொடர வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.