வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை! முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது! ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

லக்னௌவில் வீட்டின் பால்கனி இடிந்து விழுந்து விபத்து: 2 பேர் பலி, 30 பேர் காயம்

லக்னௌவில் திருமண விழாவின்போது வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர். 

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 12:35 pm IST

லக்னௌவில் திருமண விழாவின்போது வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர். 

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், 

பிஜ்னோர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நுத்ரிகேடா கிராமத்தில் வியாழக்கிழமை இரவு வீட்டில் திருமண விழா நடந்துகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

சஷிந்திர யாதவின் பூர்வீக வீட்டின் பால்கனி அவரது மகளின் திருமண விழா நடந்து கொண்டிருந்தபோது இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தின் போது, ​​திருமண ஊர்வலத்தை வரவேற்க பல பெண்கள் பால்கனியில் நின்று கொண்டிருந்தனர். 

இறந்தவர்கள் ஷ்ரத்தா (5), கிஷோர் திவாரி (45) என அடையாளம் காணப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 12 பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், அவர்கள் தற்போது சிகிச்சைபெற்று வருகின்றனர். மற்றவர்கள் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக காவல் அதிகாரி கூறினார். 

இந்த சம்பவம் தொடர்பாக எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.