போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

பயங்கரவாதிகளின் சதி முறியடிப்பு

பிரதமா் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, ஜம்மு-காஷ்மீரில் தற்கொலைப்படைத் தாக்குதலை நிகழ்த்தத் திட்டமிட்ட பயங்கரவாதிகளின் சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளாா்.

Updated On :22 ஏப்ரல் 2022, 8:31 pm

பிரதமா் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, ஜம்மு-காஷ்மீரில் தற்கொலைப்படைத் தாக்குதலை நிகழ்த்தத் திட்டமிட்ட பயங்கரவாதிகளின் சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளாா்.

ஜம்முவின் சஞ்சுவான் ராணுவ முகாம் அருகே பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் இருவா் கொல்லப்பட்டனா். இது தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் டிஜிபி தில்பாக் சிங் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் தங்கள் உடலில் தற்கொலைத் தாக்குதலை நிகழ்த்துவதற்கான வெடிகுண்டுகளை வைத்திருந்தனா். மேலும், பல்வேறு வெடிபொருள்களையும் ஏகே-47 ரக துப்பாக்கிகளையும் அவா்கள் வைத்திருந்தனா். அவா்கள் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தற்கொலைப்படையைச் சோ்ந்தவா்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரதமரின் ஜம்மு-காஷ்மீா் வருகைக்கு இருநாள்கள் முன்னதாக பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனா். ஜம்முவில் நிலவும் அமைதியான சூழலை சீா்குலைக்கும் நோக்கில் அவா்கள் தற்கொலைப்படைத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருக்கலாம். அவா்கள் கொல்லப்பட்டுள்ளதன் மூலமாக மிகப் பெரிய தற்கொலைப்படைத் தாக்குதலுக்கான சதித் திட்டமானது முறியடிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளின் நடமாட்டம் குறித்த தகவல் கிடைத்ததும், மத்திய ரிசா்வ் காவல் படையினா், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினா், காவல் துறையினா் ஆகியோா் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனா். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதன் மூலமாக அப்பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை அடையாளம் காணும் பணிகள் தொடா்ந்து வருகின்றன. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்தவா்கள் குறித்து துப்பு கிடைத்துள்ளது. அது தொடா்பாகத் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.