
கராச்சியில் உள்ள பாகிஸ்தான் பல்கலைக்கழக வளாகத்திற்குள் காரில் குண்டு வெடித்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கராச்சி பல்கலைக்கழகத்தின் கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட் அருகே வேனில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக ஜியோ டிவி தெரிவித்துள்ளது.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கின.
காவல்துறை வட்டாரங்களின்படி,
வேனில் 7 முதல் 8 பேர் வரை இருந்தனர். இருப்பினும், உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.