ஏர் இந்தியா நிறுவனத்துடன் ஏர் ஆசியா இந்தியா நிறுவனத்தை இணைக்க டாடா குழுமம் முடிவு செய்துள்ளது.
டாடா குழுமத்தின் விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா மற்றொரு விமான சேவை நிறுவனமான ஏர் ஆசியா இந்தியாவை வாங்கி இணைக்க ஒப்புதல் வழங்கக்கோரி இந்தியப் போட்டி ஆணையமான சிசிஐ-யிடம் அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.
2013-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஏர் ஆசியா இந்தியா நிறுவனத்தில் டாடா குழுமம் 83.67 சதவீத பங்குகளை வைத்திருந்த நிலையில் மீதமுள்ள பங்குகளுக்கான தொகையைச் செலுத்தி தற்போது அதனை முழுமையாக வாங்க உள்ளது.
மேலும், மத்திய அரசின் வசமிருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை இந்தாண்டு வாங்கிய டாடா குழுமம் தற்போது ஏர் ஆசியா இந்தியா நிறுவனத்தையும் ஏர் இந்தியா நிறுவனத்தையும் இணைத்து ஏர் இந்தியா பெயரிலேயே நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


