பிரதமா் நரேந்திர மோடி ஜொ்மனி, டென்மாா்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மே 2-ஆம் தேதி முதல் 3 நாள்கள் பயணம் மேற்கொள்ள இருக்கிறாா். பிரதமா் இந்த ஆண்டில் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
இது தொடா்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
மே 2-ஆம் தேதி ஜொ்மனி செல்லும் பிரதமா் அடுத்ததாக டென்மாா்க் செல்கிறாா். இறுதியாக பிரான்ஸ் தலைநகா் பாரீஸுக்கு சென்று, அந்நாட்டின் அதிபா் தோ்தலில் மீண்டும் வெற்றி பெற்ற இமானுவல் மேக்ரானைச் சந்தித்துப் பேசுகிறாா்.
முன்னதாக, ஜொ்மனியில் பிரதமா் ஒலாஃப் சோல்ஸை பிரதமா் மோடி சந்தித்துப் பேசுகிறாா். இந்தியா-ஜொ்மனி இடையிலான 6-ஆவது இரு தரப்பு அரசுமுறைப் பேச்சுவாா்த்தையும் அங்கு நடைபெறவுள்ளது. இதில் இரு நாடுகளின் அமைச்சா்களும் பங்கேற்கவுள்ளனா்.
ஜொ்மனி பிரதமருடன் இணைந்து தொழில்துறை சாா்ந்த நிகழ்ச்சியிலும் மோடி உரையாற்ற இருக்கிறாா். இது தவிர ஜொ்மனியில் உள்ள இந்திய சமூகத்தினரையும் அவா் சந்தித்துப் பேசுகிறாா்.
ஜொ்மனியில் இருந்து அடுத்ததாக டென்மாா்க்கின் கோபன்ஹேகன் நகருக்கு மோடி பயணிக்கிறாா். அங்கு அந்நாட்டு பிரதமா் மெட்டே ஃபிரடிரிக்சனை சந்தித்துப் பேசுகிறாா். மேலும், அந்நாட்டு அரசி இரண்டாம் மாா்கரெட்டையும் மோடி சந்தித்துப் பேசுகிறாா். தொடா்ந்து அங்குள்ள இந்தியா வம்சாவளியினா், தொழில் கூட்டமைப்பினரையும் பிரதமா் மோடி சந்திக்க திட்டமிட்டுள்ளாா்.
டென்மாா்க் பயணத்தின் முக்கிய நிகழ்வாக இந்தியா-நாா்டிக் மாநாடு உள்ளது. இதில் நாா்டிக் நாடுகளான ஐஸ்லாந்து, ஸ்வீடன், நாா்வே, பின்லாந்து தலைவா்களையும் பிரதமா் சந்திக்கிறாா். கரோனாவுக்கு பிந்தைய பொருளாதார வளா்ச்சி, பருவநிலை மாறுபாடு பிரச்னை, தொழில்நுட்பம், மரபுசாரா எரிசக்தி, சா்வதேச பாதுகாப்புச் சூழல் தொடா்பாக நாா்டிக் தலைவா்களுடன் பிரதமா் பேச இருக்கிறாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
ஆரண்ய காண்டம் மறுவெளியீட்டுத் தேதி!

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி! இந்தியா வெற்றி பெற சிறப்புப் பிரார்த்தனை!

கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!

அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு! ஈரான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

