தமிழக-கேரள எல்லை குமுளியில் கடும் வெயிலில் அவதிப்படும் பயணிகள்

தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரள எல்லை குமுளியில் உள்ள பேருந்து நிலையத்தில் கடும் வெயில் வெப்பத்தால் வெளியூர் பயணிகள், கூலித் தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர்.
தமிழக-கேரள எல்லை குமுளியில் கடும் வெயிலில் அவதிப்படும் பயணிகள்
Published on
Updated on
1 min read

கம்பம்: தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரள எல்லை குமுளியில் உள்ள பேருந்து நிலையத்தில் கடும் வெயில் வெப்பத்தால் வெளியூர் பயணிகள், கூலித் தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர்.

தேனி மாவட்டம் குமுளியில் தமிழக கேரள எல்லையில் உள்ளது. கேரள எல்லையில் உள்ள குமுளி சுற்றுலா தளமாக தங்கும் விடுதி, வணிக வளாகங்கள், பேருந்து நிலையம் என ஆடம்பரமான பகுதியாக உள்ளது.

அதே நேரத்தில் தமிழக எல்லையில் உள்ள குமுளி கூடலூர் மற்றும் கம்பம் மேற்கு வனச்சரக பகுதிகளில் அமைந்துள்ளது. இதனால் பேருந்து நிலையம், அடிப்படை வசதிகளான கழிப்பறை, குடிநீர், உள்ளிட்டவைகள் ஏற்படுத்தப்பட வில்லை.

இந்நிலையில் குமுளியில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்ற அரசின் உத்தரவு பல ஆண்டுகளாகியும் நிறைவேற்றப்படவில்லை. 

குமுளி வழியாக தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஆண்-பெண் தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

தமிழகம் வழியாக கூடலூர், கம்பம், தேனி, மதுரை, திண்டுக்கல், உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள், கூலித் தொழிலாளர்கள் தமிழக எல்லை குமுளியில் பேருந்து நிலையத்தில் நிற்கும் போது தற்போது கடும் கோடை வெயிலால் அவதிப்படுகின்றனர். 

நகராட்சி அல்லது போக்குவரத்து நிர்வாகமோ தற்காலிக நிழற்குடை, குடிநீர் வசதி ஏற்படுத்தி தருமாறு இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com