கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அசாம் மக்களின் நேசத்திற்கு வட்டியுடன் திரும்ப செலுத்துவேன்: பிரதமர்

கர்பி ஆங்லாங் மாவட்டத்தின் திபுவில் இன்று ‘அமைதி, ஒற்றுமை மற்றும் வளர்ச்சிப் பேரணியில்’ பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். 

News image

அசாம் மக்களின் நேசத்திற்கு வட்டியுடன் திரும்ப செலுத்துவேன்: பிரதமர்

Updated On :28 ஏப்ரல் 2022, 12:33 pm

கர்பி ஆங்லாங் மாவட்டத்தின் திபுவில் இன்று ‘அமைதி, ஒற்றுமை மற்றும் வளர்ச்சிப் பேரணியில்’ பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். 

இந்த நிகழ்ச்சியின் போது பல்வேறு திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

கால்நடை மருத்துவக்கல்லூரி (திபு), பட்டப்படிப்பு கல்லூரி (மேற்கு கர்பி ஆங்லாங்), வேளாண் கல்லூரி (கோலோங்கா, மேற்கு கர்பி ஆங்லாங்) ஆகியவற்றுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், கர்பி ஆங்லாங் மக்களின் அன்பான வரவேற்புக்காக நன்றி. “சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு பெருவிழாவும், அசாமின் மகத்தான புதல்வர் லச்சித் போர்புக்கானின் 400 ஆவது பிறந்த நாளும் இதே காலத்தில் வருகிறது. தேசபக்திக்கும், தேச சக்திக்கும் லச்சித் போர்புக்கானின் வாழ்க்கை உத்வேகமாக உள்ளது. கர்பி ஆங்லாங்கிலிருந்து நாட்டின் மகத்தான நாயகனுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்.

அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்ற உணர்வுடன் இரட்டை எஞ்சின் அரசு பணியாற்றுகிறது. அசாமின் நிரந்தர அமைதிக்கும், துரித வளர்ச்சிக்கும் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை செயல்படுத்துவது துரித கதியில் நடைபெற்று வருகிறது. 2,600-க்கும் அதிகமான நீர்நிலைகளை கட்டமைக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது என்றார்.

அசாம் மக்களின் நேசத்திற்கு, வட்டியுடன் அவர்களுக்கு திரும்ப செலுத்துவேன் என்று உறுதி அளித்த பிரதமர், இந்தப் பகுதியின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருப்பதாகவும் கூறி, உரையை நிறைவு செய்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.