ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

25 கூட்டங்கள், 8 உலக தலைவர்கள், 50 தொழிலதிபர்கள்; பிரதமர் மோடியின் ஐரோப்பிய பயணம் பற்றிய முழு விவரம்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துவரும் நிலையில், மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மே 2ஆம் தேது முதல் செல்கிறார்.

News image
நரேந்திர மோடி (கோப்புப் படம்)
Updated On :30 ஏப்ரல் 2022, 12:51 pm

DIN

இந்தாண்டின் முதல் வெளிநாட்டு பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி, 25 கூட்டங்களில் கலந்து கொள்கிறார். மூன்று நாடுகளுக்கு செல்லும் அவர் கிட்டத்தட்ட 65 மணி நேரம் அங்கு செலவிடபோவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பு பேச்சுவார்த்தை, பல தரப்பு பேச்சுவார்த்தை என பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்ளும் மோடி, ஏழு நாடுகளை சேர்ந்த எட்டு தலைவர்களை சந்திக்கிறார். அதுமட்டுமின்றி, உலக நாடுகளை சேர்ந்த 50 தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடவுள்ளார். 

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துவரும் நிலையில், ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மே 2ஆம் தேது முதல் மோடி பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த நாடுகள் அனைத்து, ரஷியாவுக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ளன. 

முதலில், ஜெர்மனிக்கு செல்லும் மோடி, அங்கிருந்து டென்மார்க்கிற்கு பயணம் மேற்கொள்கிறார். பின்னர், பயணத்தின் இறுதி நாளான மே 4ஆம் தேதி, பாரிஸ் செல்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.