சென்னை ஐஐடியில் பிஎஸ் டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன்

சென்னை ஐஐடி நான்கு ஆண்டுகள் பயிலும் பிஎஸ் டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன் படிப்பினை அறிமுகம் செய்கிறது.
சென்னை ஐஐடியில் பிஎஸ் டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன்
சென்னை ஐஐடியில் பிஎஸ் டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன்


வழங்கிய பிஎஸ்சி புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ் ஆன்லைன் படிப்பு வெற்றிகரமாக அமைந்துவிட்டதைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் பயிலும் பிஎஸ் டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன் படிப்பினை அறிமுகம் செய்கிறது.

பிஎஸ்சி படிப்புக்கு ஏராளமான வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, இந்த புதிய படிப்பு அறிமுகம் செய்யப்படுவதாக சென்னை ஐஐடி அறிவித்துள்ளது.

இந்த படிப்பு முடித்தவர்கள் 8 மாதங்கள் ஏதேனும் நிறுவனம் அல்லது ஆராய்ச்சியில் தொழில்பழகுனர்களாக பணியாற்றுவார்கள்.

தற்போது 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பவர்கள் கூட இதற்கு விண்ணப்பித்து தங்களுக்கான இடத்தை உறுதி செய்து கொள்ளலாம். அவர்கள் 12ஆம் வகுப்பு முடித்த பிறகு இந்தப் பாடத்தைத் தொடங்கலாம்.  எந்தப் பாடப்பிரிவையும் எடுத்துப் படித்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு எந்த வயது வரம்பும் இல்லை. பத்தாம் வகுப்பில் ஆங்கிலம் மற்றும் கணக்கு எடுத்துப் படித்திருந்தால் போதுமானது. 

வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும். இதற்கு விண்ணப்பிக்க 2022ஆம் ஆண்டு செப்டம்பர் கடைசி நாள். 

இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் iitm.ac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com