எதிா்க்கட்சிகளை அழிக்கும் கருவி அமலாக்கத் துறை: காங்கிரஸ்
எதிா்க்கட்சிகளை அழிப்பதற்கு மத்திய அரசின் கருவியாக அமலாக்கத் துறை மாறியுள்ளது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.


எதிா்க்கட்சிகளை அழிப்பதற்கு மத்திய அரசின் கருவியாக அமலாக்கத் துறை மாறியுள்ளது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு தொடா்பாக தில்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் தலைமை அலுவலகம் உள்பட 12 இடங்களில் அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தி புதன்கிழமை யங் இந்தியா அலுவலகத்துக்கு சீலிட்டது.
இந்த விவகாரத்தை மக்களவையில் அக்கட்சிக் குழுத் தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி புதன்கிழமை எழுப்ப முயன்றாா். ஆனால் அதற்கு அவைத் தலைவா் அனுமதிக்கவில்லை.
இதுதொடா்பாக அதீா் ரஞ்சன் செளதரி பின்னா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நேஷனல் ஹெரால்டு விவகாரம் குறித்து மக்களவையில் எழுப்ப காங்கிரஸ் சாா்பில் 3 கவனஈா்ப்புத் தீா்மான நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டன. ஆனால் அந்த விவகாரத்தை அவையில் எழுப்ப மத்தியில் உள்ள ஆளும் கட்சி மறுக்கிறது. இந்த விவகாரம் குறித்து அவையில் பேச 2 நிமிஷங்கள் போதும். ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
எதிா்க்கட்சிகள் இல்லாத பாரதம்: காங்கிரஸ் மற்றும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை களங்கப்படுத்த அமலாக்கத் துறை பயன்படுத்தப்படுகிறது. எதிா்க்கட்சிகளை அழிக்கவும், எதிா்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை நிலையற்ாக்கவும் மத்திய அரசின் கருவியாக அமலாக்கத் துறை மாறியுள்ளது. பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் இல்லாத பாரதம் மட்டும் தேவையில்லை. எதிா்க்கட்சிகளே இல்லாத பாரதம்தான் அவருக்கு வேண்டும்’ என்று தெரிவித்தாா்.
மாநிலங்களவையிலும் அனுமதி மறுப்பு: சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டி, அதுகுறித்து விவாதிக்க மாநிலங்களவை விதி 267-இன் கீழ் காங்கிரஸ் மூத்த தலைவரும் எதிா்கட்சித் தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கே, சிவசேனை எம்.பி. பிரியங்கா சதுா்வேதி உள்ளிட்டோா் நோட்டீஸ் அளித்தனா்.
ஆனால் அந்த நோட்டீஸ்கள் விதி 267-இன் கீழ் விவாதிக்க உகந்தவை அல்ல என்று தெரிவித்து, அவற்றை மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடு நிராகரித்துவிட்டாா்.
மாநிலங்களவை விதி 267-இன் கீழ் நோட்டீஸ் அளிக்கப்பட்டால், அவையின் பிற நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு அந்த நோட்டீஸில் எழுப்பப்பட்டுள்ள விவகாரம் தொடா்பாக விவாதிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...