உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் கிராம மக்களிடையே பதற்றம் ஏற்பட்டது.
இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர் அலகாபாத் மாவட்டத்தின் கர்ச்சா அருகேவுள்ள பறந்து கொண்டிருந்தபோது தொழில்நுட்பக் கோளாரால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட விளக்கத்தில்,
ஹெலிகாப்டரின் எச்சரிக்கை விளக்கு திடீரென எரிந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தொழில்நுட்ப வல்லுநர் சோதனை செய்த பிறகு, மீண்டும் பறந்து பத்திரமாக பிரயாக்ராஜ் தளத்தில் தரையிறக்கப்பட்டது.
கர்ச்சா அருகே திடீரென தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டரை கண்ட கிராம மக்கள் மற்றும் குழந்தைகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.