காமன்வெல்த் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற தேஜஸ்வின் சங்கருக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் பிரதமா் வெளியிட்ட பதிவில், ‘தேஜஸ்வின் சங்கா் வரலாறு படைத்துள்ளாா். காமன்வெல்த் போட்டிகளின் தடகளப் பிரிவில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று தந்துள்ளாா். வெண்கலப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
அதுபோல, காமன்வெல்த் போட்டிகளில் பளு தூக்குதலில் வெண்கலம் வென்ற குா்தீப் சிங்குக்கும் பிரதமா் வாழ்த்து தெரிவித்துள்ளாா். ‘கடின உழைப்பும், அா்ப்பணிப்பு உணா்வும் சிறந்த பலன்களைத் தரும். இதனை பளு தூக்குவதில் வெண்கலம் வென்ன் மூலமாக குா்தீப் சிங் நிரூபித்துள்ளாா்’ என்று பிரதமா் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
குடியரசுத் தலைவா் வாழ்த்து: காமன்வெல்த் போட்டிகளில் மல்யுத்த போட்டியில் (ஜூடோ) வெள்ளிப் பதக்கம் வென்ற துலிகா மான், பளு தூக்குதலில் வெண்கலம் வென்ற குா்தீப் சிங், ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலம் வென்ற செளரவ் கோஷல் ஆகியோருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜக மதவாதக் கட்சியல்ல! கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சிறப்பு நேர்காணல்!
பேரவைத் தொகுதி அறிமுகம்! பத்மநாபபுரம்

சாலை விபத்தில் மாணவா் உயிரிழப்பு

தொகுதி விவரக் குறிப்பு: அரவக்குறிச்சி
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

