என்று மாறும் இந்த நிலை? மகனின் உடலை தோளில் சுமந்துச் சென்ற தந்தை
பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள மருத்துவமனையில், ஆம்புலன்ஸ் வழங்க மறுத்ததால் தனது மகனின் உடலை கொட்டும் மழையில் தந்தையே தோளில் சுமந்துச் சென்ற அவலம் நடந்தேறியுள்ளது.
ஸ்வரூப்ரானி நேரு மருத்துவமனை ஆம்புலன்ஸ் வழங்க மறுத்துவிட்டதால், தனது மகனின் உடலை பல கி.மீ. தொலைவுக்கு தோளில் சுமந்துச் சென்றுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேஹா கிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ஷிவன், மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வழங்க மறுத்துவிட்டதால், மருத்துவமனை வளாகத்தில் இருந்த தனியார் ஆம்புலன்ஸ்கள் அதிகக் கட்டணம் கேட்டதால், தந்தை, தனது மகனின் உடலை தோளில் சுமந்துச் செல்லும் நிலை ஏற்பட்டது.
இதையும் படிக்க.. அந்த ஒருநாள்: ஞாயிறன்று என்ன செய்ய வேண்டும்? உழைப்பா? ஓய்வா?
செல்லும் வழியில், ஒரு கார் ஓட்டுநர், இந்த தந்தைக்கு உதவ முன் வந்துள்ளார். இதையடுத்து, சிறுவனின் உடலை காரில் எடுத்துச் சென்றுள்ளார். பிறகு திஹா கிராமத்துக்குள் இறங்கி மீண்டும் தனது மகனின் உடலை தோளில் போட்டுக் கொண்டு நடந்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், வழக்கம் போல இந்த துயரச் சம்பவங்கள் எவ்வாறு மாதத்துக்கு ஒரு முறை நடக்கிறதோ, அதுபோல இந்த விடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வழக்கம் போல வைரலாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.