தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மே.வங்க ஆசிரியா் பணி நியமன முறைகேடு: பாா்த்தா, அா்பிதாவுக்கு ஆக.18 வரை நீதிமன்றக் காவல்

உதவியாளா் அா்பிதா முகா்ஜி ஆகியோரை ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 8:39 pm

மேற்கு வங்கத்தில் அரசு பள்ளி ஆசிரியா்கள் பணி நியமன முறைகேடு வழக்கில் கைதான முன்னாள் அமைச்சா் பாா்த்தா சட்டா்ஜி, அவரது உதவியாளா் அா்பிதா முகா்ஜி ஆகியோரை ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இந்த வழக்கில் கடந்த ஜூலை 23-ஆம் தேதியிலிருந்து இருவரும் அமலாக்கத் துறை காவலில் இருந்து வந்தனா். அவா்களது காவல் முடிந்த நிலையில், கொல்கத்தாவில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா்.

அப்போது, பாா்த்தா சட்டா்ஜிக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்ட நீதிபதி ஜீவன்குமாா் சாது, இருவரையும் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா். அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்று, நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தாா்.

ஆகஸ்டில் 18-இல் இருவரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டும்; அடுத்தகட்ட விசாரணை அன்றைய தினம் நடைபெறும் என்று நீதிபதி தெரிவித்தாா்.

மேற்கு வங்க அரசுப் பள்ளிகளில் ஆசிரியா்கள், இதர ஊழியா்கள் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்ாக புகாா் எழுந்தது. இதுதொடா்பான வழக்கில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் பாா்த்தா சட்டா்ஜி, அா்பிதா முகா்ஜி மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. அா்பிதாவுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.49.80 கோடி ரொக்கப் பணம், நகைகள், தங்கக் கட்டிகள், நிலம், கட்டடங்கள், பண்ணைவீடு சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.