இந்தியாவின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் 31 சதவீதம் (7408 மில்லியன் டாலா்) அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு வணிக நுண்ணறிவு, புள்ளியியல் தலைமை இயக்ககம் வெளியிட்ட தரவுகளின்படி, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் ஒட்டுமொத்த ஏற்றுமதி ஏப்ரல்-ஜூன் 2022 இல் 7408 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே கால பகுதியில் இது 5663 மில்லியன் டாலா்களாக இருந்தது. ஏப்ரல்-ஜூன் 2022-23க்கான ஏற்றுமதி இலக்கு 5890 மில்லியன் அமெரிக்க டாலா்களாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் எடுத்த முயற்சிகள் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த ஏற்றுமதி இலக்கில் 31 சதவீதத்தை எட்டுவதற்கு உதவியுள்ளன.
வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளியியல் தலைமை இயக்குநரகதின் தரவுகளின்படி, புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி நான்கு சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதே சமயம் பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதியும் 59.71 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இறைச்சி, பால் மற்றும் கோழிப் பொருள்களின் ஏற்றுமதி 9.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. பிற தானியங்களின் ஏற்றுமதி 29 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. பிற தானியங்களின் ஏற்றுமதி ஏப்ரல்-ஜூன் 2021 இல் 237 மில்லியன் டாலரில் இருந்து ஏப்ரல்-ஜூன் 2022 இல் 306 மில்லியன் டாலராக அதிகரித்ததாக புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரன்கள் குவிக்கத் தவறும் கேமரூன் கிரீன்; முன்னாள் ஆஸி. கேப்டன் கூறுவதென்ன?

பள்ளிச்சட்டம்பி! வரவேற்பு பெறும் பிருத்விராஜின் சிறப்புத் தோற்றம்!

கூட்டுப் பாலியல் வன்கொடுமை! 17 வயது சிறுமி தற்கொலை!

ஐஸ்வர்யா மேனன் படத்தின் அறிமுக போஸ்டர்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


