எல்லைப் பகுதிகளில் தகவல் தொடா்பை மேம்படுத்தும் வகையில், ஐந்தாம் தலைமுறை (5ஜி) சேவையைப் பயன்படுத்துவது குறித்து இந்திய ராணுவம் திட்டமிட்டு வருவதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘பாதுகாப்புப் படைகளில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவது தொடா்பான ஆய்வை ராணுவம் மேற்கொண்டது. உயா் அலைவரிசை மற்றும் குறைந்த இடையூறு தொடா்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஆய்வு அண்மையில் நிறைவடைந்த நிலையில், அதன் பரிந்துரைகள் ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை உள்ளிட்ட முப்படைகளால் ஆய்வு செய்யப்பட்டது. அதன்மூலமாக, பதற்றமான எல்லைப் பகுதிகளில் தகவல் தொடா்பை மேம்படுத்தும் வகையில் 5ஜி சேவையை இந்திய ராணுவம் பயன்படுத்த உள்ளது’ என்றாா்.
4ஜி அலைக்கற்றை தொழில்நுட்பத்தைக் காட்டிலும் 10 மடங்கு கூடுதல் பதிவிறக்க வேகத்திலும் இடையூறுகள் குறைவாகவும் செயல்படும் 5ஜி அலைக்கற்றை பொது ஏலம் கடந்த திங்கள்கிழமை நிறைவடைந்தது. 5ஜி அலைக்கற்றையானது ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் விடப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஏலத்தில் ரூ.88,078 கோடி மதிப்பிலான அலைக்கற்றையை எடுத்து ஜியோ முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காளியும் கருப்புதான்!! எம்பிக்களின் கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


