மூணாறு குண்டலா எஸ்டேட்டில் நிலச்சரிவு

கேரளத்தில் உள்ள மூணாறு குண்டலா எஸ்டேட்டில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஒரு கோயில் மற்றும் இ,ரண்டு கடைகள் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளன. 
மூணாறு குண்டலா எஸ்டேட்டில் நிலச்சரிவு

கேரளத்தில் உள்ள மூணாறு குண்டலா எஸ்டேட்டில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஒரு கோயில் மற்றும் இரண்டு கடைகள் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளன. 

மூணாறு-வட்டவாடா வழித்தடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால், பெரிய பாறைகள் மற்றும் மண் சரிவுகளால் அந்த பாதை மூடப்பட்டது. தற்போது அந்த இடம் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவால் இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை, மேலும், நிலைமை குறித்து எச்சரிக்கப்பட்ட பின்னர் சுமார் 175 குடும்பங்கள் புதுக்குடி பகுதியில் உள்ள நிவாரண முகாமுக்கு மாற்றப்பட்டனர்.

இந்த பயங்கர நிலச்சரிவால் அப்பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் விவசாயம் நாசமாகியுள்ளது. 

இதுகுறித்து வட்டவாடா ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா வி குமார் கூறுகையில், 

ஒவ்வொரு சாலையும் முற்றிலுமாக சேதமடைந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் கிராமத்துக்குச் செல்வது மிகவும் சிரமமாக உள்ளது.

நள்ளிரவில் நிலச்சரிவு பற்றி எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அடுத்த 15 நிமிடங்களில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு அடைந்தோம் என்றார். 

கேரளாவில் கடந்த சில நாள்களாகத் தொடர் மழை பெய்து வருவதால் அம்மாநிலம் முழுவதும் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் மாநிலம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநிலத்தின் பல பகுதிகளில் சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கையைத் தொடர்ந்து மக்கள் விழிப்புடன் இருக்குமாறு மாநில முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டார்.

கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநிலப் படைகளின் அவசரக் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த அவசரப் பிரிவை மாநில அரசு தயார் செய்துள்ளது என்றும் முதல்வர் கூறினார்.

இடுக்கி, கோழிக்கோடு, திருச்சூர் மற்றும் வயநாடு மாவட்டங்களில் என்.டி.ஆர்.எஃப் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் விரைவில் கேரளா சென்றடையும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com