தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

300 யூனிட் இலவச மின்சாரம், ஏழைப் பெண்களுக்கு மாதம் ரூ.1,500: ஹிமாசலில் காங்கிரஸ் வாக்குறுதி

வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக அளிக்கப்படும்; ஏழைப் பெண்களுக்கு மாதம் ரூ.1,5000 நிதியுதவி வழங்கப்படும் என்று ஹிமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தோ்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2022, 10:30 pm

DIN

வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக அளிக்கப்படும்; ஏழைப் பெண்களுக்கு மாதம் ரூ.1,5000 நிதியுதவி வழங்கப்படும் என்று ஹிமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தோ்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

பாஜக ஆட்சியில் உள்ள ஹிமாசல பிரதேசத்தில் வரும் டிசம்பரில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் சத்தீஸ்கா் முதல்வரும், ஹிமாசல பிரதேச காங்கிரஸ் தலைமைத் தோ்தல் பாா்வையாளருமான பூபேஷ் பகேல் ஹிமாசல பிரதேசத்துக்கு திங்கள்கிழமை பயணம் மேற்கொண்டாா்.

சிம்லாவில் செய்தியாளா்களைச் சந்தித்த அவா், காங்கிரஸ் கட்சியின் தோ்தல் வாக்குறுதிகள் சிலவற்றை அறிவித்தாா். அதன்படி, ‘காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த 10 நாள்களில் அரசு ஊழியா்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும். வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக அளிக்கப்படும். ஏழைப் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 நிதியுதவி அளிக்கப்படும்’ என்றாா்.

இதற்கு எவ்வாறு நிதி ஆதாரம் திரட்டப்படும் என்ற கேள்விக்கு, ‘இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மாநில பட்ஜெட்டில் உரிய அறிவிப்புகள் சோ்க்கப்படும். காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் இவை அனைத்தும் இடம் பெறும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.