
- PTI
Updated On :18 மார்ச் 2026, 11:47 pm

அடுத்த நிதியாண்டுக்கான பல்வேறு மத்திய அமைச்சகங்களின் மானிய கோரிக்கைகளுக்கு மக்களவை புதன்கிழமை தனது ஒப்புதலை வழங்கியது.
பல்வேறு மத்திய அமைச்சகங்கள் தரப்பில் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான மானிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அதில் 2026-27 நிதியாண்டில் ரூ.53 லட்சம் கோடிக்கு செலவினம் முன்வைக்கப்பட்டிருந்தது. அதற்கு அவையில் விவாதிக்காமலேயே தனது ஒப்புதலை மக்களவை வழங்கியது.
முன்னதாக, ரயில்வே அமைச்சகம் மற்றும் வேளாண் அமைச்சகங்களின் மானிய கோரிக்கைகள் மீது மக்களவையில் விவாதம் நடத்தப்பட்டது. ஆனால் மற்ற அமைச்சகங்களின் மானிய கோரிக்கைகள் மீது மக்களவை விவாதம் நடத்தவில்லை.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...